ஈரப்பலா பற்றிய சில உண்மைகள்
ஈரப்பலா அத்தி மற்றும் பலா மரங்களின்(மோரெசியா ) அதே குடும்ப தாவரமாகும்.தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, தென் பசுபிக், மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் உள்ளிட்ட வெப்பமண்டல காலநிலைகளில் இது செழித்து வளர்கிறது.
தோற்றம்
நியூ கினியா மற்றும் இந்தோ-மலாய் பிராந்தியத்தில் ஈரப்பலா தோன்றியது.
மற்றும் தீவுவாசிகளின் பயணத்தின் மூலம் பரந்த பசுபிக் முழுவதும் பரவியது. 1500களின் பிற்பகுதியில் ஐரோப்பியர்கள் ஈரப்பலாவைக் கண்டுபிடித்தனர்.
1600 களில் தெற்கில் இறங்கிய டச்சு படையெடுப்பாளர்களால் ஈரப்பலா இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காலி கோட்டையில் முதன்முதலில் ஈரப்பலா நடப்பட்டது.
பருவகாலத்தில் விளையும் பழங்களுள் இவற்றையும் காணலாம்.
பயன்கள்
ஈரப்பலா விதைகள் மற்றும் பழங்கள் உணவாக உண்ணப்படுகின்றன.
மருந்து தயாரிக்க ஈரப்பலாவின் வேர்கள், இலைகள் மற்றும் மரப்பால் பயன்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமல்லாது ,மருந்து மூட்டுவலி, ஆஸ்துமா, முதுகுவலி, காயம் குணப்படுத்துதல், காது நோய்த்தொற்றுகள் மற்றும் பிற நிலைமைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பு:- இந்த பயன்பாடுகளை ஆதரிக்க நல்ல அறிவியல் சான்றுகள் இல்லை.
இந்ந மரத்தில் செய்யப்படும் பலகையை கறையான் சேதப்படுத்தாது.
உடைந்த எலும்புகள் மற்றும் சுளுக்கு சிகிச்சைக்காக லேடெக்ஸ் தோலில் மசாஜ் செய்யப்பட்டது மற்றும் சியாட்டிகாவைப் போக்க முதுகுத்தண்டில் கட்டு போடப்பட்டது.
நொறுக்கப்பட்ட இலைகள் பொதுவாக தோல் நோய்கள் மற்றும் 'த்ரஷ்' போன்ற பூஞ்சை நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன.
சிறப்புகள்
இம்மரத்திலுள்ள சிறப்பு என்னவெனில் ஆண்பூக்களும்,பெண்பூக்களும் பூக்கும்.
விஞ்ஞானப்பெயராக மெனோசிஸ் என்று கூறுவார்கள்.
இந்ந மரத்தில் செய்யப்படும் பலகையை கறையான் சேதப்படுத்தாது.
இம்மரத்தில் ஆண்டுக்கு சுமார் 200 ற்கு மேற்ப்பட்ட காய்கள் காய்க்கும்.
எல்லாவிதமான மண் வகைகளிலும் வளரும் இவை தென்னாசியாவில் மாத்திரம் அதிக விளைச்சலை கொடுக்கிறது.
ஈரப்பலா மரம் பசுபிக் தீவுகளில் உள்ள பூர்வீக மருந்தகத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது.
ஈரப்பலா மரத்தின் பட்டை சாம்பல் நிறத்திலும் மிகவும் மெல்லியதாகவும் காணப்படும்.
உணவு பயன்பாடு
ஈரப்பலாவை அதிகமாக அவித்து சாப்பிடுவார்கள்.அது மட்டுமல்லாது அதை சைட்டிஸ் ஆகவும், அவித்த ஈரபலாவை சம்பலோடும் அல்லது காரம் சேர்த்தும் காலை உணவாக உட்கொள்ளுவர்.
ஜெலி,ஊறுகாய்கள்,ஜாம் போன்ற உணவுகளை தயாரிக்கவும் பயன்படுத்துவர்.
இரைப்பை அழற்சி இருப்பவர்கள் இதனை தவிர்த்துக்கொள்ளுதல் நன்று.