இந்த 9 உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க: உடலில் உள்ள எலும்புகளை அரித்துவிடுமாம்
உடலில் பலமான எலும்பு மண்டலத்தை பராமரிப்பது மிகவும் அவசியம்.
சில உணவுகள் உடலில் உள்ள எலும்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே அவற்றை தவிர்ப்பது உடல் ஆரோக்கியம் மேம்பட வழிவகுக்கும். எலும்பு அரிப்பை ஏற்படும் உணவுவகைகள் என்னவென்று பார்ப்போம்.
சோடா சர்க்கரை மற்றும் கார்பனேடட் நிறைந்த சோடா போன்றவற்றில் பாஸ்ஃபோரிக் அமிலம் உள்ளது.
இது உடல் கால்சியம் உறிஞ்சும் திறனை குறைத்து எலும்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்கிறது.
ஆல்கஹால் அதிகப்படியாக ஆல்கஹால் குடிப்பதும் உடலில் எலும்பு மண்டலம் உருவாவதை தடுக்கிறது.
இதனால் எலும்பு முறிவு ஏற்படுகிறது. மேலும், எலும்பு ஆரோக்கியம் குறைந்து, எலும்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.
அதிகப்படியான வைட்டமின் ஏ உடல் வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ சேர்ப்பது மிக அவசியம் ஆனால் இவற்றை மாத்திரைகள் மற்றும் அசைவ உணவுகள் மூலம் உடலில் அதிகம் சேரவிடுவது உடலின் எலும்பு மண்டலத்தை பாதிக்கிறது.
அமிலம் நிறைந்த உணவுகள் அமிலம் நிறைந்த உணவுகளான பாலக்கீரை, பீட் கீரைகள் உள்ளிட்டவற்றில் அதிகப்படியாக ஆக்சலேட்கள் உள்ளது.
இவை உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு இடையூறு ஏற்படுத்தி, எலும்பு ஆரோக்கியத்தை குறைத்துவிடுகிறது.
சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகள் சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளால் அலர்ஜி போன்ற நிலைகள் ஏற்படும். இதனால் எலும்பு ஆரோக்கியம் பாதிப்படைகிறது.
பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள் அதிகளவு பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளான இறைச்சி உணவுகள், கோலா பானங்கள் சாப்பிடுவதால் கால்சிய சமநிலையை தடுக்கிறது. இதனால் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
அதிகப்படியான புரதம் புரதம் அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும்போது அது உயிரிழப்பு வரை உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
புரதச்சத்தை வழங்கும் மாத்திரைகள், பானங்களை அதிகம் எடுத்துக்கொள்வது சிறுநீரில் கால்சிய இழப்பை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
உப்பு நிறைந்த உணவுகள் உப்பு அதிகம் உள்ள சிப்ஸ், துரித உணவுகள், கேனில் அடைக்கப்பட்ட சூப்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஸ்னாக்ஸ்கள் போன்றவை கால்சியத்தின் அளவை குறைத்து, சிறுநீரில் அவற்றை வெளியேற்றி, எலும்பை வலுவிழக்கச்செய்கிறது.
காஃபைன் காஃபைன் உணவுகளான காபி, தேநீர் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக்கொண்டால் கால்சிய இழப்பை அதிகரித்து எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |