சுவிட்சர்லாந்தில் திடீரென வெளிநாட்டவர்கள் சிலருக்கு கிடைத்த வாக்களிக்கும் உரிமை
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் சிலருக்கு திடீரென வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளது.
திடீரென கிடைத்த வாக்களிக்கும் உரிமை
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை என்பது மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும்.
சொல்லப்போனால், சில மாகாணங்களில் மட்டுமே, அதுவும், மாகாண மற்றும் முனிசிபல் மட்டத்தில் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. ஃபெடரல் மட்டத்தில் வாக்களிக்கும் உரிமை கிடையாது.
இந்நிலையில், Jura மாகாணத்தில் வாழும் வெளிநாட்டவர்கள் சிலருக்கு திடீரென வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளது.
விடயம் என்னவென்றால், Bern மாகாணத்திலிருந்த Moutier என்னும் முனிசிபாலிட்டி, தற்போது Jura மாகாணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Jura மாகாணத்தில் மாகாண மற்றும் முனிசிபல் மட்டத்தில் வாக்களிக்கும் உரிமை வெளிநாட்டவர்களுக்கு உண்டு.
ஆக, Moutier முனிசிபாலிட்டி தற்போது Jura மாகாணத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அம்மாகாணத்துக்கு புதிதாக 1,000 வாக்காளர்கள் கிடைத்துள்ளார்கள். அவர்களில் வெளிநாட்டவர்களான 50 பேருக்கும் தற்போது வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |