வீட்டில் வைக்க கூடாத சாமி படங்கள்! எந்ததெந்த சாமி படங்கள் தெரியுமா?
பூஜை அறையில் நாம் வணங்கும் சாமி படங்களை வைத்து தான், நமது வாழ்க்கையின் தரமும் உயரும்.
எனவே பூஜை அறையில் எந்த உருவங்களை வைக்க வேண்டும், எந்த உருவங்களை வைக்கக் கூடாது என சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன.
அதை முறைப்படி பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும்.
எந்தெந்த சாமி படங்களை வைக்கக்கூடாது?
சனீஸ்வர பகவானின் படங்கள் மற்றும் உருவச்சிலைகளுக்கு வீட்டில் வைத்து பூஜை செய்தல் கூடாது.வீட்டு வாசல்களில் மஹா விஷ்ணு, மஹா லட்சுமி படங்களை தொங்க விட கூடாது.
நவ கிரகங்களின் படங்களை பூஜை அறையில் வைத்து எப்போதும் பூஜை செய்யக் கூடாது.நடராஜரின் உருவ படத்தை வீட்டில் வைக்கக்கூடாது.
கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவணம் கட்டிய நிலையில் உள்ள முருக பெருமானின் படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது.
கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது. தலைக்கு மேல் வேல் இருக்கும்.
ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.
வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |