அசிங்கமான தெரியும் குதிகால் வெடிப்பை குறைக்க வேண்டுமா? இதோ சில அற்புத டிப்ஸ்
பொதுவாக கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான் குதிகால் வெடிப்பு வருவது சகஜம் தான். இந்த குதிகால் வெடிப்பு வருவதற்கு பலரும் வறட்சி மட்டும் தான் காரணம் என்று நினைக்கிறோம்.
வேறுசில காரணங்களும் குதிகால் வெடிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக ஒருவருக்கு இருந்து, அதனை சரியாக கவனிக்காமல் விட்டால், அதனால் கடுமையான குதிகால் வலியை சந்திப்பதோடு, சில நேரங்களில் முற்றிய நிலையில் இரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே இவற்றை ஆரம்பத்திலே தெரிந்து கொண்டு இதனை போக்குவது நல்லது. தற்போது இதனை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்பதை பார்ப்போம்.
அரிசி மாவு
2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் வினிகரை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
பின் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் பத்து நிமிடம் ஊற வைத்து, பின் தயாரித்து வைத்துள்ள பேஸ்ட் கொண்டு பாதங்களை மென்மையாக தேய்க்க வேண்டும். அதன் பின் பாதங்களை கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வெஜிடேபிள் ஆயில்
முதலில் பாதங்களை நன்கு சுத்தமாக கழுவி உலர்த்திக் கொள்ள வேண்டும். பின் வெஜிடேபிள் ஆயிலை பாதங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பின் கால்களில் சௌகரியமான சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வர, குதிகால் வெடிப்பு விரைவில் குணமாகும்.
வாஸ்லின்
முதலில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஒரு பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு பாதங்களை உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு டீஸ்பூன் வாஸ்லின் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் மட்டுமின்றி, அதிகம் வறட்சியடையும் பகுதிகளிலும் தடவிக் கொள்ள வேண்டும்.
பின் கால்களில் உல்லன் சாக்ஸ் அணிந்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் பாதங்களைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்ய, குதிகால் வெடிப்புகள் மாயமாய் மறையும்.