பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அக்டோபர் மாதம் கொண்டுவர இருக்கும் சில முக்கிய மாற்றங்கள்...
பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அக்டோபர் மாதம் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது.
அவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.
பிரெஞ்சு குடியிருப்பு அனுமதி பெற்ற வெளிநாட்டவர்கள் மற்றும் பிரான்சில் தங்கள் இரண்டாவது வீட்டைக் கொண்டிருப்பவர்களுக்கு இம்மாதம் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது.
அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்...
புதிய கோவிட் மற்றும் ப்ளூ தடுப்பூசி
எளிதில் நோய் தொற்றும் அபாயத்தில் உள்ளவர்களுக்காக இம்மாதம் 3ஆம் திகதி முதல், ஒமிக்ரான் வைரஸையும் எதிர்கொள்ளும் வகையிலான கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதுடன், அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முதல், வழக்கமாக குளிர்கால ப்ளூ தடுப்பூசியும் வழங்கப்பட உள்ளது.
கடிகாரங்கள் குளிர்கால நேரத்துக்கு மாறுகின்றன
அக்டோபர் மாதம் 29ஆம் திகதி இரவு கடிகாரங்கள் ஒரு மணி நேரம் பின்னோக்கித் திரும்ப உள்ளன.
எரிபொருள் விலை தள்ளுபடி முடிவுக்கு வருகிறது
எரிபொருள் விலை தள்ளுபடி அக்டோபர் மாதம் முழுவதும் தொடரும் நிலையில், அது நவம்பரில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
சாலையில் வாகனங்கள் பழுதானால் செய்யப்படும் உதவிக்கான கட்டணம் மாற்றம்
சாலையில் வாகனம் பழுதாகி நின்றால் அதை பணிமனைக்கு கொண்டு செல்வதற்கான கட்டணம் உயர இருக்கிறது.
உணவு வவுச்சர்களில் மாற்றம்
உணவு வவுச்சர்களைக் கொண்டு செலவிடும் தொகை, நாளொன்றிற்கு 19 யூரோக்களிலிருந்து 25 யூரோக்களாக உயர இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு...