சில அகதிகள் திருப்பி அனுப்பப்படலாம்: ஜேர்மனி அமைச்சர் தகவல்
சிரியாவிலிருந்து அகதிகளாக ஜேர்மனிக்கு வந்த சிலர், மீண்டும் சிரியாவுக்கே திருப்பி அனுப்பப்படலாம் என ஜேர்மன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சில அகதிகள் திருப்பி அனுப்பப்படலாம்
சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாதின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, சிரியா நாட்டவர்கள் சிலர் சிரியாவுக்கே திருப்பி அனுப்பப்படலாம் என ஜேர்மனி உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் நிலைமை சீராகிவிட்டதால், எங்கள் நாட்டின் சட்டத்தின்படி ஜேர்மனியில் மக்களுக்கு இந்த பாதுகாப்பு அவசியமில்லை என்றால், புலம்பெயர்தல் மற்றும் அகதிகளுக்கான பெடரல் அலுவலகம் (BAMF) பாதுகாப்பு மானியங்களை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெறும் என்றார் அவர்.
வேலை அல்லது பயிற்சி இல்லாததால் ஜேர்மனியில் குடியிருக்க உரிமை இல்லாதவர்கள் மற்றும் தானாக முன்வந்து சிரியாவுக்குத் திரும்பாதவர்களுக்கு இது பொருந்தும் என்றும் அவர் கூறினார்.
என்றாலும், ஜேர்மனியுடன் நன்கு ஒருங்கிணைந்து வாழ்பவர்கள், வேலையில் இருப்பவர்கள், ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொண்டவர்கள் முதலானோர் ஜேர்மனியில் தங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நான்சி தெரிவித்தார்.
சிரியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் சிரியர்களுக்கு உதவிகள் அளிக்கப்படும், அதே நேரத்தில் குற்றவாளிகள் மற்றும் இஸ்லாமியவாதிகள் முடிந்தவரை விரைவாக நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் கூறிய நான்சி, அற்கான சட்டப்படியான நெறிமுறைகள் உள்ளன, சிரியாவில் நிலவும் நிலைமையைப் பொருத்து அவை பயன்படுத்தப்படும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |