இருமல், ஜலதோஷம், மூக்கடைப்பு போன்ற நோய்களை விரட்ட வேண்டுமா? இதோ சில எளிய இயற்கை மருத்துவ குறிப்புக்கள்!
Home remedies
Natural medical tips
By Balakumar
சில எளிய இயற்கை மருத்துவ குறிப்புக்கள்
- சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
- சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.
- ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
- கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.
- முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.
- தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு, சளிகட்டு நீங்கும்.
- நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
- ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.
- ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும்.
- முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறெடுத்து அதில் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.
- துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும்.
- கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது.
- மாதுளம்பழம் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, ஞாபக சக்தி எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்.
- முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி மாதம் 2 தடவை சாப்பிட வேண்டும்.
- 10 கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவாது.
- காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
- பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.
- தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.
- தலை கனத்துக்கு சுக்குப் பற்றுப் போடலாம். வசம்பு பற்றுப் போடலாம். வால்மிளகை சுடு நீரில் அரைத்துப் பற்றுப் போடலாம்.
-
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US