பிரான்சில் நுழைவதற்கான புதிய விதியிலிருந்து சுவிட்சர்லாந்தின் இந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் விலக்கு! வெளியான முக்கிய தகவல்
பிரான்சின் புதிய கொரோனா சோதனை விதியிலிருந்து சுவிட்சர்லாந்தில் உள்ள பலருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
பிரான்சில் நுழைவதற்கான புதிய எல்லை கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகள் உட்பட வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள், சமீபத்தில் கொரோனா சோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்ற முடிவை வழங்க வேண்டும்.
மேலும் அத்துடன் ‘declaration of honour’அல்லது தங்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்று சத்தியப்பிரமாணத்தை வழங்க வேண்டும்.
ஆனால் சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்கள், குறிப்பாக Geneva, Vaud, Jura, மற்றும் Basel போன்ற எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்கள், சில நிபந்தனைகளின் கீழ் இந்தத் சோதனை விதியிலிருந்து விலக்கு பெறலாம்.
எல்லை தாண்டிய தொழிலாளர்கள், லொறி ஓட்டுநர் மற்றும் பிரான்ஸ் எல்லையிலிருந்து 30 கி.மீ தூரத்திற்குள் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா சோதனை முடிவை வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.