இந்த எழுத்துகள் கொண்ட UPI transactions ID-கள் இன்று முதல் பிளாக் செய்யப்படும்
சிறப்பு எழுத்துக்களை கொண்ட யுபிஐ பரிவர்த்தனை ஐடிகள் இன்று முதல் (பிப்ரவரி 1, 2025) பிளாக் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
UPI transactions ID விதிகள்
UPI என்பது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) உருவாக்கிய உடனடி கட்டண முறை ஆகும்.
மேலும் UPI பணப்பரிவர்த்தனை IMPS உள்கட்டமைப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரின் வங்கிக் கணக்குகளுக்கு இடையில் உடனடியாக பணத்தை மாற்ற அனுமதிக்கிறது.
தற்போதைய காலத்தில் நாம் பணம் அனுப்புவதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் வீட்டில் இருந்தபடியே கையில் இருக்கும் மொபைல் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம்.
முக்கியமாக யுபிஐ வந்தபிறகு பணம் அனுப்புவதற்கு இன்னும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, பேடிஎம், போன்பே என எந்த யுபிஐ முறை என்றாலும் மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
எங்கு சென்றாலும் துணிக்கடை முதல் டீக்கடை வரை UPI மூலம் தான் பணம் செலுத்துகின்றனர். அந்த அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி 1 -ம் திகதி முதல் (@,#, * உள்ளிட்ட) சிறப்பு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட யுபிஐ ஐடிகள் (UPI ID) மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஏற்கப்படாது என நேஷனல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதவாது, எண்கள் (0-9) மற்றும் எழுத்துக்களை கொண்டு உருவாக்கிய யுபிஐ பரிவர்த்தனை ஐடிகள் மட்டுமே ஏற்கப்படும் என்றும், சிறப்பு எழுத்துக்களை கொண்டு உருவாக்கிய ஐடிகள் தடை செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளை உருவாக்கும் செயல்முறையை தரப்படுத்துவதையும், பாதுகாப்பை மேம்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, UPI பரிவர்த்தனை ஐடியில் எந்த சிறப்பு எழுத்துக்களையும் அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வங்கி நிறுவனங்களும் இதனை கடைபிடிக்குமாறு NPCI அறிவுறுத்தியுள்ளது.
UPI பரிவர்த்தனைகளின் அளவு 2018 இல் 375 கோடியிலிருந்து, 2024 இல் 17,221 கோடியாக அதிகரித்தது. அதேசமயம் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2018 இல் ரூ.5.86 லட்சம் கோடியிலிருந்து 2024 இல் ரூ.246.83 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |