அமெரிக்காவிற்கு மேல் பறக்கும் பிரித்தானிய செயற்கைக்கோள்.! கிளம்பியுள்ள திடீர் பிரச்சினை
பிரித்தானியாவின் பழைய செயற்கைக்கோள் ஒன்று அமெரிக்காவிற்கு மேற் பறந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பழமையான செயற்கைக்கோள் Skynet-1A-ஐ யாரோ இடமாற்றம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதை யார் செய்தது, எதற்காக செய்தனர் என்பது அறியப்படாத மர்மமாக உள்ளது.
1969-ல் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அருகே இருந்த இச்செயற்கைக்கோள் இப்போது அமெரிக்காவிற்கு மேல் இடமாற்றம் செய்யப்பட்டு, 36,000 கிலோமீட்டர் உயரத்தில் நிலை கொண்டுள்ளது.
இயல்பாகவே இடம் மாற்றம் ஆக முடியாத இந்த செயற்கைக்கோள், 1970களில் யாரோ ஒரு அதிகாரபூர்வ குழு தன்னுடைய த்ரஸ்டரை பயன்படுத்தி மேற்குத் திசையில் நகர்த்தியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த செயற்கைக்கோள், இயங்காமல் போன பின்னும், 105 டிகிரி மேற்கு தெளிவில் உள்ள gravity well எனப்படும் இடத்தில் உள்ளது.
இதனால் இது இன்னும் செயல்படும் செயற்கைக்கோள்களுக்கு அருகில் சென்று மோதும் அபாயத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
அதன் காரணமாக, இந்த சேதம் ஏற்படும் பொறுப்பை பிரித்தானிய அரசாங்கம் ஏற்க வேண்டும்.
பழைய பத்திரிகைகளில் மற்றும் தேசிய காப்பகங்களில் இருந்து எந்த ஆதாரத்தையும் கண்டறிய முடியாததால், இது யாருடைய கட்டுப்பாட்டில் இப்போதும் இருந்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது.
Orbital graveyard எனப்படும் பாதுகாப்பான உயரத்தில் இருக்க வேண்டும் என்ற நிலையில், அந்த நேரத்தில் பூமியின் வெளியே உள்ள குப்பைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இவ்வகை விண்வெளி குப்பைகளை அகற்றும் புதிய தொழில்நுட்பங்கள் தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றன.
இந்த செயற்கைக்கோளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவது பிரித்தானிய அரசின் எதிர்கால திட்டமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK's oldest satellite, Skynet-1A