ஆயுள் முழுவதும் மாதம் 10,000 பவுண்டுகள்... அதிர்ஷ்டசாலியை தேடும் லொட்டரி நிர்வாகம்
பிரித்தானியாவில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாதம் 10,000 பவுண்டுகளை பரிசாக வென்றுள்ள நபரை லொட்டரி நிர்வாகம் தேடி வருகிறது.
மாதம் 10,000 பவுண்டுகள்
குளோசெஸ்டர்ஷைர் பகுதியை சேர்ந்த ஒருவர் மே 18ம் திகதி வாங்கிய லொட்டரியில், அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாதம் 10,000 பவுண்டுகள் பரிசாக வென்றுள்ளார்.
ஆனால் அந்த நபருக்கு அவர் வெற்றி பெற்றுள்ளது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என கூறுகின்றனர். வெற்றி இலக்கமான 10, 32, 36, 39, 43 மற்றும் சிறப்பு இலக்கமான 2 ஆகியவை உங்கள் சீட்டில் பதிவ்காகியிருந்தால், உடனையே பரிசுக்கு உரிமை கோரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
@getty
அந்த அதிர்ஷ்டசாலிக்கு எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி வரையில் கால அவகாசம் இருப்பதாகவும், தவறினால் பணத்தை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
வாழ்க்கையை மாற்றியமைக்கும் தொகை
சீட்டு கைவசம் இல்லை என்ற போதும், தாங்கள் வென்றுள்ளது உறுதியானால், அவர்கள் கண்டிப்பாக வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கோரியுள்ளனர்.
மர்மமான அந்த அதிர்ஷ்டசாலியை தொடர்ந்து தேடி வருவதாக தேசிய லொட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாதம் 10,000 பவுண்டுகள் என்பது உண்மையில், வாழ்க்கையை மாற்றியமைக்கும் தொகை தான் என அந்த நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.