”நான் ஒரு வேற்றுகிரகவாசி” கடற்கரை தெருவில் நிர்வாணமாக நடந்த நபர் கைது!
அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள பாம் கடற்கரை தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது.
நிர்வாணமாக நடந்த நபர்
அமெரிக்கா நாட்டின் புளோரிடா மாகாணத்திலுள்ள பாம் கடற்கரை தெருவில் சுமித்(44) என்ற நபர் உடலில் துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாகச் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
@ndtv
இதனைப் பார்த்த மக்கள் அச்சத்தில் காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளனர். அதன் பின் அந்த நபரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
வேற்றுகிரகவாசி
பாம் பீச் காவல்துறையில் அந்த நபரை பொலிஸார் விசாரிக்கையில் அவர் தன்னை பற்றி எந்த விவரமும் கூறவில்லை. என்ன பெயர் எங்கிருந்து வருகிறேன் என்பதை பற்றிக்கூடக் கூற மறித்துவிட்டார்.
பின்னர் அடித்து விசாரிக்கையில் தான் ஒரு வேற்றுகிரகவாசி எனக் கூறியுள்ளார். எந்த மாநிலத்திலிருந்தும் சமூகப் பாதுகாப்பு எண் அல்லது அடையாள அட்டை தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
@palmbeach post
பின்னர் அவர் ஜேசன் ஸ்மித் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாம் பீச் கவுண்டி ஷெரிப் அலுவலக இணைய முன்பதிவு பதிவுகளின்படி, ஸ்மித் இறுதியாக அநாகரீகமான வெளிப்பாடு, ஒழுங்கீனமான நடத்தை மற்றும் காவல்துறை கைது செய்வதை எதிர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவத்தில் இரவு விருந்துக்குப் பிறகு பொதுமக்கள் கூடியிருந்த வீட்டிற்குள் நிர்வாணாமாக குளித்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டார். அந்த நபர் கைது செய்யப்பட்ட பிறகு என் வீடு என நினைத்துக் குளித்துவிட்டேன் என பொலிஸாரிடம் கூறியிருக்கிறார்.