அம்மா..அம்மா! பெற்ற தாயை நினைத்து ஏங்கி வந்த 20 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்
தாய் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வருண் (20). இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வருணின் தாய் குடும்ப பிரச்சனை காரணமாகக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து அம்மா.. அம்மா என தாயையே நினைத்து வருண் சில மாதங்களான யாருடனும் பேசாமல் தனியாகவே இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று வீட்டில் தனியாக இருந்த வருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தந்தை சொக்கலிங்கம் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தாய் இல்லாத இந்த உலகத்தில் நான் இருக்க மாட்டேன் என இம்முடிவை வருண் எடுத்ததாக தெரிகிறது.
பொலிசார் வருணின் சடலத்தை கைப்பற்றிவிட்டு அவர் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.