கனடாவில் உள்ள மகன் குறித்து வந்த தகவல்! பதறியபடி பணத்தை வாரி இறைத்த பெற்றோருக்கு நேர்ந்த கதி
கனடாவில் உள்ள மகன் விபத்தை ஏற்படுத்தி ஒருவரை கொன்றுவிட்டான் என கூறி பெற்றோரிடம் லட்சக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சண்டிகரை சேர்ந்தவர் கஜிந்தர் சிங். இவர் மகன் ஜெய்தீப் கனடாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கஜிந்தர் மனைவிக்கு சில தினங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்கள் மகன் ஜெய்தீப் ஓட்டிய வாகனம் மோதி கனடாவில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து பொலிசார் அவரை அழைத்து சென்றுவிட்டனர். ரூ. 11.30 லட்சம் பணம் தேவைப்படுகிறது, அது இருந்தால் தான் ஜெய்தீப்பை விடுவிக்க முடியும் என கூறினார். இதையடுத்து கஜிந்தர் தம்பதி பணத்தை அந்த நபருக்கு அனுப்பி வைத்தனர்.
hostelworld/pexels
இதன்பின்னர் அவர்களின் மகள் தனது சகோதரர் ஜெய்தீப்புக்கு போன் செய்த போது அவர் பத்திரமாக வீட்டு படுக்கையில் படுத்திருந்தார் என தெரியவந்தது. அதாவது, அப்படி ஒரு விபத்தே கனடாவில் நடக்கவில்லை, மோசடி நபர் பொய் கூறி லட்சக்கணக்கான பணத்தை கஜிந்தர் தம்பதியிடம் ஏமாற்றி வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக சைபர் கிரைம் பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற மோசடி வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள குடும்பம் அல்லது நண்பர்களைப் பற்றிய போலிக் கதைகளை நம்பாமால் ஜாக்கிரதையாக இருக்கும்படி பொலிசார் எச்சரித்துள்ளனர்,