பெற்ற தாயை மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகன்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், பெற்ற தாயை மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாயை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகன்
பெங்களூருவில் வாழும் வெங்கடேஷ் (42) என்னும் நபர் தன் தாயை மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்டதில், சாவித்ரியம்மாள் என்னும் அந்த 75 வயதுப் பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

விசாரணையில், வெங்கடேஷின் தந்தை 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாகவும் அப்போதிருந்து வெங்கடேஷ்தான் தன் தாயை கவனித்துவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாவித்ரியம்மாளை பக்கவாதம் தாக்க, அவர் படுத்த படுக்கையாகியுள்ளார்.
தாயை கவனித்துக்கொள்வதற்காக வெங்கடேஷ் வேலையை விட, அவரது மனைவி மட்டுமே ஒரு கிளினிக்கில் உதவியாளராக வேலை செய்துவருகிறார்.
முழு நேரமும் தன் தாயை கவனித்துக்கொள்ளும் அழுத்தம் ஒரு பக்கம், பணப் பிரச்சினை இன்னொரு பக்கம் என கடும் அழுத்தத்திற்குள்ளாகியிருந்த வெங்கடேஷ், சிகிச்சையளித்தும் தன் தாயின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவரை மாடியிலிருந்து தள்ளிவிட்டுவிட்டதாக பொலிசார் தெரிவிக்கிறார்கள்.
அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |