பக்கவாத நோய் குணமாக தாயை மண்ணெண்ணெய் குடிக்க வைத்த மகன்.., கடைசியில் ஏற்பட்ட விபரீதம்
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு, மகன் மண்ணெண்ணெய் குடிக்க வைத்ததால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய் உயிரிழப்பு
இந்திய மாநிலமான மத்தியபிரதேசம் போபால் அருகிலுள்ள கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் மங்களா பாம்நேரே (48).
இவரது மகன் உமேஷ் பாம்நேரே. இதில், கடந்த மாதம் 28-ம் திகதி அன்று மங்களா, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கீழே விழுந்தார்.
பின்னர் அவரை உடனடியாக நாரியல்கேடாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் மகன் உமேஷ் சேர்த்தார்.
அப்போது, பக்கவாத நோய்க்கு மண்ணெண்ணெய் குடித்தால் சரியாகும் என்று உமேஷிடம் சிலர் கூறியுள்ளனர். அதனை நம்பிய உமேஷ், தனது தாய்க்கு சிறிது மண்ணெண்ணையை குடிக்கக் கொடுத்துள்ளார்.
இதனால் மங்களாவின் நிலை இன்னும் மோசமடைந்து அங்குள்ள எய்மஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தாய்க்கு மண்ணெண்ணெய் கொடுத்து குடிக்க வைத்த மகன் உமேஷ் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |