பேச்சை மீறி காதல் திருமணம் செய்த மகன்: மனமுடைந்த பெற்றோர் எடுத்த முடிவு
தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியில், தங்களது பேச்சை மீறி மகன் காதல் திருமணம் செய்ததால், விஷம் குடித்து பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
கிருஷ்னகிரி மாவட்டம் பெருகோனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சரவணன்( 50) மற்றும் கீதா(45). இவருக்கு, 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் ரஞ்சித்குமார் (27) வியாபாரியாக உள்ளார்.
இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த எம்எஸ்சி பட்டதாரியான தீபிகா (23) என்பவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீபிகா வேலை பார்த்து வந்துள்ளார்.
இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதை பொருட்படுத்தாமல் இருவரும் பழகி வந்துள்ளனர். இதனால், திருமணம் செய்ய முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
பெற்றோர் தற்கொலை
இதையறிந்த ரஞ்சித்குமாரின் பெற்றோர் சரவணன் மற்றும் கீதா மன வேதனையடைந்து வருந்தியுள்ளனர். இதனால், இருவரும் நேற்று காலை 10 மணியளவில் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர்.
இதை பார்த்தால் அக்கம், பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, இவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |