ஏழை புலம்பெயர் தம்பதியின் மகன்... வேலையில் இருந்து தூக்கிய பேஸ்புக் நிறுவனம்: இன்று சொத்துமதிப்பு ரூ 2,200 கோடி
இஸ்ரேல் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த ஏழை தம்பதியின் மகன் இன்று ஆண்டுக்கு 3.3 மில்லியன் டொலர் சம்பாதிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தில் வேலை
அமெரிக்காவில் குடியேறிய இஸ்ரேல் தம்பதியின் மகனான Noah Kagan தனது 23ம் வயதில், பேஸ்புக் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஓராண்டில் நீக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னர் தான் தமது வாழ்க்கை தொடங்கியதாக பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் தற்போது 41 வயதாகும் Noah Kagan.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்தவர். 2004ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, 2005ல் தனது 23 வயதில், பேஸ்புக்கில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றத் தொடங்கினார்.
ஆனால் ஒரு வருடம் கழித்து அவர் பத்திரிகைகளுக்கு நிறுவனத்தின் தகவலை கசியவிட்டதாக கூறி நீக்கப்பட்டார். பேஸ்புக் நிறுவனம் தம்மை வேலையில் இருந்து நீக்கிய காரணம் ஏற்றுக்கொள்ளும்படியானது என ஒப்புக்கொண்ட Noah Kagan,
அதன் பின்னர் தென் கொரியாவில் உள்ள தொழில்முனைவோருக்கு ஆங்கில மொழி ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். 2008ல் முழு நேர தொழில்முனைவோராக மாறினார்.
3 மில்லியன் டொலர் லாபம்
2010ல் ஒரு வார இறுதி நாட்களில் Noah Kagan உருவாக்கிய AppSumo என்ற இணைய பக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது. வெறும் 12 டொலர்கள் செலவிட்டு உருவாக்கியுள்ள அந்த இணைய பக்கத்தினூடாக கடந்த ஆண்டு அவர் 80 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டியதுடன் 7 மில்லியன் டொலர் லாபம் பார்த்துள்ளார்.
பொதுவாக தமக்கான ஆண்டு சம்பளத்தை 200,000 டொலரில் பெற்று வந்துள்ள Noah Kagan, மொத்த செலவுகளும், ஊழியர்களுக்கான சம்பளம் என அனைத்தும் செலவிட்ட பின்னர், கடந்த ஆண்டு 3 மில்லியன் டொலர் லாபம் ஈட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் 5 குடியிருப்புகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், YouTube channel ஒன்றை நடத்தி வருவதாகவும் Noah Kagan தெரிவித்துள்ளார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு என்பது 270 மில்லியன் டொலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ 2240 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |