100 நாட்கள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்ணின் மகன் UPSC தேர்வில் வென்று சாதனை!
100 நாட்கள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தாயின் மகன் இன்று UPSC தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார்.
யார் அவர்?
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) நாட்டிலேயே மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். மிகச் சிறந்த கல்வி மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே அதில் தேர்ச்சி பெற முடிகிறது.
இந்நிலையில் வறுமை குடும்பத்தின் இருந்து வந்த நபர் ஒருவர் UPSC CSE தேர்வில் தேர்ச்சி பெற்று IAS அதிகாரியாக மாறி தனது வாழ்க்கை நிலையை மாற்றியுள்ளார்.
இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஹேமந்த் பரீக் பிறந்தார். சிறுவயதில் இவரது குடும்பம் வறுமையுடன் இருந்தது.
பரீக்கின் தந்தை உள்ளூர் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவரது தாயார் 100 நாட்கள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இதில், பரீக்கின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மொத்த குடும்பத்தின் சுமையும் அவரது தயார் மீது விழுந்தது.
இதனிடையே, ஆரம்ப காலத்தில் ஹேமந்த் பரீக்கிற்கு ஒரு கை இயங்காததால் பல பிரச்னைகளை சந்தித்தார்.
இதையடுத்து, ஹேமந்த் பரீக்கின் குடும்பம் அரியானாவுக்கு இடம்பெயர்ந்து. அங்கு அவரது தாயார் வயல்களில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றினார்.
அப்போது ஒருமுறை ஒப்பந்ததாரர் ஒருவர் ஹேமந்த் பரீக்கின் தாய்க்கு, ரூ. 220 சம்பளத்தை தர மறுத்துவிட்டார். இதனையறிந்த ஹேமந்த் பரீக் அவரிடம் சென்று சம்பளம் தருமாறு கேட்டார்.
அதற்கு அந்த ஒப்பந்ததாரர் , நீ என்ன பெரிய கலெக்டரா என்று கிண்டலாக கேட்டுள்ளார். அதன்பிறகு தான் எப்படியாவது ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்று ஹேமந்த் பரீக் உத்வேகத்துடன் இருந்தார்.
இதையடுத்து, பல ஆண்டுகள் கடினமாக படித்து முதல் முயற்சியிலேயே 2023 யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 884 ஆவது இடத்தை பிடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |