ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்த பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்று உருவாகியுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டரில் நமது நாட்டின் திறமையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக "Hindustani Way" என்ற பாடல் தயாராகியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
Let’s cheer out loud for our Olympians with the “Hindustani Way” alongside the very talented @ananya_birla #Cheer4India #HindustaniWay #comingso pic.twitter.com/ON3Rx8iCO7
— A.R.Rahman #99Songs ?11th July on Colours TV ?? (@arrahman) July 6, 2021
இந்த பாடலை இளம் பாடகி அனன்யா பாடியுள்ளார் மற்றும் அனன்யா, நிர்மிகா சிங், சிஷிர் சமந்த் ஆகியோர் வரிகள் எழுதியுள்ளனர்.
மேலும் இந்த பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.