மறைந்த தாய்க்கு கோடிக்கணக்கில் செலவு செய்து கோயில் கட்டிய மகன்கள்! தமிழகத்தில் நெகிழ்ச்சி
தமிழகத்தில் மறைந்த தாய்க்கு கோடியில் செலவு செய்து மகன்கள் கோயில் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த தாய்க்கு கோயில்
தமிழக மாவட்டமான சிவகங்கை, திருப்பத்தூர் அடுத்த பட்டமங்கலம் அருகே உள்ள வெளியாரி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கருப்பையா மற்றும் முத்துக்காளி அம்மாள்.
இவர்களுக்கு சண்முகநாதன், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் மூவர்களும் செல்வந்தர்களாக உள்ளனர்.
இதில், கடந்த 2021 -ம் ஆண்டு முத்துக்காளி அம்மாள் உடல்நலக்குறைவால் தனது 62 வயதில் உயிரிழந்தார். பின்னர், தனது தாயின் மீது உள்ள அன்பால் அவருக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று மகன்கள் நினைத்தனர்.
இதனால், மறைந்த தாய்க்கு சொந்த ஊரில் கோவில் கட்ட முடிவு செய்து ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்டமாக கோயில் ஒன்றை கட்டினர்.
இந்த கோயிலில் பிரதான கோபுரமும், தங்கத்தால் செய்யப்பட்ட கலசமும் பொருத்தப்பட்டு பழங்கால வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கருவறையில் சுமார் 460 கிலோ எடை கொண்ட 5 அடி ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |