ஆரவாரம் இல்லாமல் வளர்ந்துவரும் முகேஷ் அம்பானி தம்பியின் மகன்கள்., சொகுசு கார்கள், விமானம் உட்பட சொத்து மதிப்பு தெரியுமா?
முகேஷ் அம்பானியின் குடும்பம் தற்போது ஆசியாவின் பணக்கார குடும்பமாக உள்ளது.
சமீபத்தில் ஜாம்நகரில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய 3 நாள் விழா நடைபெற்றது.
முகேஷ் அம்பானி குடும்பம் அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறை, வணிக நடவடிக்கைகள் மற்றும் தொண்டு ஆகியவற்றால் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிறது.
இருப்பினும், முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியின் குடும்பத்தினர் வெளிச்சத்திலிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள்.
அனில் அம்பானியின் குடும்பம்
அனில் அம்பானியின் குடும்பம் பொதுவெளியில் பெரிதாக பேசப்படுவது இல்லை. அவர்களை பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.
அனில் அம்பானி மற்றும் டினா அம்பானிக்கு ஜெய் அன்மோல் அம்பானி மற்றும் ஜெய் அன்ஷுல் அம்பானி என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தங்கள் பெற்றோருடன் அடிக்கடி பொதுவெளியில் காணப்படுகிறார்கள்.
மூத்த மகன் ஜெய் அன்மோல் அம்பானி
டிசம்பர் 12, 1991 அன்று மும்பையில் பிறந்த ஜெய் அன்மோல் அம்பானி, அனில் அம்பானியின் மூத்த மகனாவார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற கதீட்ரல் மற்றும் ஜான்ஸ் கான்வென்ட் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்.
பின்னர் அன்மோல் அம்பானியின் மேற்படிப்புக்காக, பிரித்தானியாவில் (UK) உள்ள செவன் ஓக்ஸ் பள்ளியில் சேர்ந்தார். அன்மோல் சிறு வயதிலேயே நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார்.
படிக்கும் போது, 18 வயதில் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் இன்டர்ன்ஷிப் செய்தார். பட்டப்படிப்பு முடிந்ததும், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் பணியாற்றத் தொடங்கினார்.
பின்னர் 2017ல் ரிலையன்ஸ் கேபிட்டலின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
ஜெய் அன்மோல் சொத்து மதிப்பு
அறிக்கைகளின்படி, ஜெய் அன்மோல் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 20,000 கோடி. அதாவது 3.3 பில்லியன் ஆகும்.
இளம் மற்றும் ஆற்றல் மிக்க தொழிலதிபராக ஜெய் அன்மோல் ரிலையன்ஸ் கேபிட்டலின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இது மட்டுமல்லாமல், பல அறிக்கைகளின்படி, Nippon Life India Asset Management Limited மற்றும் Reliance Home Finance ஆகியவற்றின் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார்.
அவரது தந்தை அனில் அம்பானி திவாலான பிறகு, மகன் ஜெய் அன்மோல் குடும்பத்தை மீண்டும் பாதையில் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இளைய மகன் ஜெய் அன்ஷுல் அம்பானி
மறுபுறம், அனில் அம்பானியின் இளைய மகன் ஜெய் அன்ஷுல் அம்பானி மும்பை கதீட்ரல் மற்றும் ஜான் கோனன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
ஒரு மதிப்புமிக்க அமெரிக்க பள்ளியில் சர்வதேச இளங்கலை திட்டத்தை முடித்தார். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தற்போது 28 வயதான ஜெய் அன்ஷுல் அம்பானி தற்போது Reliance Infrastructure-ல் மேலாண்மை பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.
Reliance Mutual Fund மற்றும் Reliance Capital-ல் அனுபவம் பெற்ற இவர், தற்போது வணிகத் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
தந்தை, மூத்த சகோதரர் மற்றும் பிற நிறுவன மேலாளர்களால் பயிற்சியளிக்கப்பட்ட அன்ஷுல் Reliance Infra board-ல் இருந்து ஆறு மாதங்களுக்குள் விலகினார். பின்னர் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சியாளராக சேர்ந்தார்.
ஜெய் அன்ஷுல் சொகுசு கார் சேகரிப்பு
ஜெய் அன்ஷுல் சொகுசு கார் சேகரிப்பை வைத்திருக்கிறார். அதில் Mercedes GLK350, Lamborghini Gallardo, Rolls-Royce Phantom, Range Rover Vogue மற்றும் Lexus SUV ஆகிய கார்கள் அடங்கும்.
இது தவிர, Bombardier Global Express XRS, Bell 412 helicopter, Falcon 2000 மற்றும் Falcon 7X உள்ளிட்ட விமானங்கயையும் அவர் வைத்திருக்கிறார். மேலும், 4.2 கோடி மதிப்புள்ள பங்குகள் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Anil Ambani Elder son Jai Anmol Ambani, Jai Anmol Ambani Net Worth, Mukesh Ambani brother Anil Ambani, Anmol Ambani family, Anil Ambani Younger son Jai Anshul Ambani, Jai Anshul Jai Anmol