பாவம் செய்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.., திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு
பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று திமுக அமைச்சர் ஆர்.காந்தி பேசியது அடுத்த சர்ச்சையாக மாறியுள்ளது.
அமைச்சர் பேசியது
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 1 -ம் திகதி அன்று முப்பெரும் விழா ஒன்று நடந்தது.
இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரான ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "கடந்த ஜென்மத்தில் யாராவது பாவம் செய்திருந்தால் மகன்கள் பிறப்பார்கள். புண்ணியம் செய்திருந்தால் மகள்கள் பிறப்பார்கள்.
தாய், தந்தை எங்கிருந்தாலும் பெண்ணிற்கு தான் பாசம் அதிகமாக இருக்கும். இதை பொதுவாக கூறுகிறேன், தப்பாக கூறவில்லை, இது இயல்பு.
இதனை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் பாசமாக இருந்தால் தான் குடும்பம் மட்டுமல்ல, நாடும் நன்றாக இருக்கும்" என்றார்.
இதற்கு முன்னதாக, மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது. போன ஜென்மத்தில் பாவங்கள் செய்தவர்கள் தான் மறுபிறவியில் ஏழைகளாகவும், மாற்றுத்திறனாளிகளாகவும் பிறக்கின்றனர் என்று சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பள்ளியில் பேசியது சர்ச்சையானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |