விரைவில் மன்னர் சார்லஸ் தன் பதவியைத் துறப்பார்: பிரபல ஜோதிடர் ஆரூடம்
பிரித்தானிய மன்னர் விரைவில் தன் பதவியைத் துறப்பார் என்று கூறியுள்ளார் பிரபல ஜோதிடர் ஒருவர்.
விரைவில் மன்னர் சார்லஸ் தன் பதவியைத் துறப்பார்
பிரித்தானியா மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பிரபல பிரித்தானிய ஜோதிடரான Patrick Arundell என்பவர், மன்னர் அடுத்த ஆண்டில் தன் பதவியைத் துறப்பார் என்று கூறியுள்ளார்.
சுதந்திரம் பெற பல அமைப்புகள் முயலும் நிலையில், நாட்டை ஒற்றுமையாக வைக்கவும், மன்னராட்சியில் மறுசீரமைப்புகள் செய்யவும் மன்னர் சார்லஸ் முயற்சி செய்வார் என்கிறார் Patrick.
Getty images
அடுத்த மன்னர் யார் என்பது குறித்து மாறுபட்ட கணிப்புகள்
அதன் விளைவாக, அவரது ஆட்சிக்காலம் குழப்பங்கள் உடையதாக இருக்கும் என்று கூறும் Patrick, ஆகவே, குறுகிய காலம் மட்டுமே சார்லசுடைய ஆட்சிக்காலம் நீடிக்கும் என்றும், அவருக்கு பதிலாக இளவரசர் வில்லியம் மன்னராக பொறுப்பேற்பார் என்றும் கணித்துள்ளார்.
2024 கோடையின் துவக்கம் வாக்கில் மன்னர் சார்லஸ் பதவி விலகினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறும் Patrick, இளவரசர் வில்லியம் மன்னராவதற்கு சார்லஸ் வழிவிடுவார் என்கிறார்.
Getty images
இதற்கிடையில், மன்னர் சார்லஸ் தன் பதவியைத் துறப்பார் என்றும், அதைத் தொடர்ந்து இளவரசர் ஹரி மன்னராக பதவியேற்கக்கூடும் என்றும் பிரான்ஸ் நாட்டு பிரபல ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Exclusive: Leading astrologer predicts that King Charles could ABDICATE next year https://t.co/5hV3mHkSJC pic.twitter.com/y377vnG9M5
— Daily Mail Online (@MailOnline) April 21, 2023
Getty images