இன்னும் சில வாரங்களில் மொபைல் போனை பயன்படுத்தி கொரோனாவை கண்டறியும் சோதனை பிரான்சில் அறிமுகம்
பிரான்சில் இன்னும் சில வாரங்களில் மொபைல் போனை பயன்படுத்தி 10 நிமிடங்களில் கொரோனாவை கண்டறியும் சோதனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Lille பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்ட அதிவேக கொரோனா பரிசோதனை கிட் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
உடலில் ஏற்படும் மாற்றங்களை அறியவல்ல biosensor ஒன்றின் அடிப்படையில், ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கருவி, ஒருவருக்கு கொரோனா உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிந்து சொல்லும்.
இந்த பரிசோதனையின் முடிவுகள் பத்தே நிமிடங்களில் தயாராகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், அந்த மாதிரிகளை மருத்துவ நிபுணர்கள்தான் சேகரிக்கமுடியும். இந்த சோதனை இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும். ஆனால், அதை பெருமளவில் தயாரிப்பதற்காக நிதி உதவி செய்யும் ஒருவருக்காக ஆய்வாளர்கள் காத்திருக்கிறார்கள்.
தனியார் நிதி உதவி செய்பவர்கள் யாரும் கிடைக்கவில்லை என்றால், அரசை அணுகுவது என முடிவு செய்துள்ளார்கள் அவர்கள்.