34 பந்துகளில் 64 ரன் விளாசிய சோஃபி! தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரை நியூஸிலாந்து அணி கைப்பற்றியது.
அன்னெரி டெர்க்சன் 55 ஓட்டங்கள்
நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி வெல்லிங்டனின் ஸ்கை மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. அன்னெரி டெர்க்சன் (Annerie Dercksen) 32 பந்துகளில் 55 ஓட்டங்கள் விளாசினார்.
சோஃபி டிவைன் மிரட்டல்
பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் பிலிம்மர் 29 ஓட்டங்களும், அமெலியா கெர் 31 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட சோஃபி டிவைன் (Sophie Devine), 34 பந்துகளில் 64 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாச நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் நியூஸிலாந்து டி20 தொடரையும் வென்றது. 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜெஸ் கெர் ஆட்டநாயகி விருது பெற்றார்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |