சர்வதேச அளவில் பிரம்மாண்ட சாதனை! மிரட்டிய நியுசிலாந்து கேப்டன்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் சோஃபி டிவைன், டி20 போட்டிகளில் 2000 ஓட்டங்களுடன் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
நியுசிலாந்து-தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான காமன்வெல்த் டி20 போட்டி பெர்மிங்காமில் நடந்தது.
இந்த போட்டியில் நியுசிலாந்து அணி 167 ஓட்டங்கள் எடுத்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணி 154 ஓட்டங்களே எடுத்ததால் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
நியுசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் இந்தப் போட்டியில் 48 ஓட்டங்கள் விளாசினார். அத்துடன் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அவர், 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த நிலையில் புதிய உலக சாதனை ஒன்றை அவர் படைத்துள்ளார். மகளிர் டி20 கிரிக்கெட்டில் 2000 ஓட்டங்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீராங்கனை சோஃபி டிவைன் ஆவார்.
Associated Press