நான் நினைத்த அளவிற்கு அழவில்லை! கடைசி உலகக்கிண்ணத்தில் தோல்வி..விடைபெற்ற நியூசிலாந்து கேப்டன்
நியூசிலாந்து மகளிர் அணித்தலைவர் சோபி டிவைன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
சோபி டிவைன்
மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் நேற்றையப் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இப்போட்டியில் நியூசிலாந்து அணித்தலைவர் சோபி டிவைன் (Sophie Devine) 35 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 23 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் 4.2 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை சாய்த்தார்.
அவர் இந்தத் தொடருடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்தார். சோபி டிவைன் 2006ஆம் ஆண்டு முதல் 19 ஆண்டுகள் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். 
முழுமையாக முடிக்கவில்லை
159 போட்டிகளில் விளையாடியுள்ள சோபி டிவைன், 9 சதங்கள் மற்றும் 18 பவுண்டரிகளுடன் 4,279 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இதில் அதிகபட்சம் 145 ஓட்டங்கள் ஆகும். மேலும் 75 சிக்ஸர், 410 பவுண்டரிகள் அடுத்துள்ள இவர், பந்துவீச்சில் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஓய்வு குறித்து பேசிய சோபி டிவைன், "நான் நினைத்த அளவிற்கு அழவில்லை. அதை அறிவிப்பதில் சிறந்த விடயம் என்னவென்றால், உணர்ச்சிகளை என்னால் செயல்படுத்த முடிந்தது. இன்று (நேற்று) அதை அனுபவிப்பதும், 19 ஆண்டுகளுக்கு முந்தைய வேர்களுக்குத் திரும்புவதும், நான் ஏன் விளையாடுகிறேன் என்பதும் பற்றியது.
இந்த அற்புதமான விளையாட்டை இத்தனை ஆண்டுகளாக விளையாடியதில் நான் மிகவும் பாக்கியவானாக உணர்கிறேன், ஆனால் நான் இன்னும் முழுமையாக முடிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். எனவே நான் இன்னும் மைதானத்தைச் சுற்றியுள்ள மக்களை எரிச்சலூட்டுகிறேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |