கடைசி ஓவரில் 26 ஓட்டங்கள் விளாசல்! அடித்து நொறுக்கிய வீராங்கனையின் வீடியோ
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், இங்கிலாந்து வீராங்கனை சோபி கடைசி ஓவரில் 26 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி டெர்பியில் நடந்தது.
இந்த போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரில் களத்தில் இருந்த சோபி எக்லெஸ்டோன் ருத்ர தாண்டவம் ஆடினார். 20வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி விளாசிய சோபி, அடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தார்.
நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்த அவர், அதற்கு அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார். கடைசி பந்தை சோபி சிக்ஸருக்கு பறக்கவிட, இங்கிலாந்து அணி 176 ஓட்டங்கள் குவித்தது.
26 runs from the final over!
— England Cricket (@englandcricket) July 26, 2022
An entertaining cameo from @sophecc19 last night ? pic.twitter.com/pyRusOtVrk
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், இங்கிலாந்து 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சோபி எக்லெஸ்டோன் 12 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள் விளாசினார். மேலும் பந்துவீச்சிலும் மிரட்டிய அவர் இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
PC: Nathan Stirk/Getty Images
மேலும், ஆட்ட நாயகர் மற்றும் தொடர் நாயகர் ஆகிய இரண்டு விருதுகளையும் சோபி தட்டிச் சென்றார்.
PC: Nigel French/PA
PC: insidesport