பிரித்தானியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற பிரான்ஸ் நாட்டு இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

France
By Balamanuvelan Sep 13, 2024 08:10 AM GMT
Report

பிரித்தானியாவில், தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் வேலைக்கு வந்த இளம்பெண்ணை, சூனியக்காரி என்று கூறி கொலை செய்து எரித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில், அந்த இளம்பெண்ணின் கடைசி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற பிரான்ஸ் நாட்டு இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை | Sophie Lionnet Nanny Murder Sabrina Kouider

Credit: AFP or licensors

வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் சோபி (Sophie Lionnet). லண்டனில் Sabrina Kouider மற்றும் Ouissem Medouni என்னும் தம்பதியினரின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்கு சேர்ந்தார்.

ஆனால், சோபி தனது முன்னாள் காதலனான மார்க் (Mark Walton) என்பவருடன் மந்திர சக்தி உதவியால் தொடர்பிலிருப்பதாகவும், அவருக்காக வேவு பார்ப்பதற்காக வந்திருப்பதாகவும் குற்றம் சுமத்தி அவரை அந்த தம்பதியினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற பிரான்ஸ் நாட்டு இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை | Sophie Lionnet Nanny Murder Sabrina Kouider

Credit: PA:Press Association

அடி உதையால் சோபியின் மார்பெலும்பு, விலா எலும்புகள் மற்றும் தாடை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது.

சரியாக உணவு கொடுக்காமல், அடித்து, உதைத்து, பாலியல் வன்கொடுமை செய்து விடுவதாக மிரட்டி அந்தப் பெண்ணை சித்திரவதை செய்துள்ளனர்.

ஒரு நாள் சொல்வதற்கு நாவு கூசும் அளவிற்கு கொடுமைகள் புரிந்த பின், சோபியைக் கொன்று, தோட்டத்தில் வைத்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர் அந்த தம்பதியர்.

பிரித்தானியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற பிரான்ஸ் நாட்டு இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை | Sophie Lionnet Nanny Murder Sabrina Kouider

Credit: Collect

பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண் பிணம் எரியும் வாடை அடிப்பது கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்திருக்கிறார். பொலிசார் வந்து பார்க்கும்போது எரிந்துபோன நிலைமையில் இருந்த எலும்புகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

Sabrina மற்றும் Ouissem ஆகிய இருவரையும் கைது செய்த பொலிசார் அவர்களை சிறையில் அடைத்தனர். இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சோபியைக் கொல்வதற்குமுன் அந்த ஈவிரக்கமில்லாத தம்பதி தங்கள் மொபைல் போனில் அவரை எடுத்த வீடியோக்கள் விசாரணைக்கு உதவியாக எடுத்துக்கொள்ளப்பட்டன.

பிரித்தானியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற பிரான்ஸ் நாட்டு இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை | Sophie Lionnet Nanny Murder Sabrina Kouider

Credit: Rex Features

இந்நிலையில், சரியாக உணவளிக்கப்படாததால், எலும்பும் தோலுமாக காணப்படும் சோபியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதுவே அவர் கொல்லப்படும் முன் கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

Sabrina மற்றும் Ouissem தம்பதிக்கு தண்டனை வழங்கப்பட்டும், அது சோபியின் பெற்றோருக்கு எவ்வித ஆறுதலையும் அளிக்கவில்லை.

பிரித்தானியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற பிரான்ஸ் நாட்டு இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை | Sophie Lionnet Nanny Murder Sabrina Kouider

Credit: Enterprise News and Pictures

அவர்கள் செய்ததை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள சோபியின் தாய் கேத்தரின், அவர்கள் ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டார்கள், என மகளை கொடுமைப்படுத்தியுள்ளார்கள், என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்கிறார்.

பிரித்தானியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற பிரான்ஸ் நாட்டு இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை | Sophie Lionnet Nanny Murder Sabrina Kouider

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US