மீண்டும் தாயான ரஜினிகாந்தின் மகள்! வெளியான அழகிய புகைப்படம்
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில், விசாகன் - சௌந்தர்யா ரஜினிகாந்த் தம்பதிக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தமது ட்விட்டர் பக்கத்தில், இறைவன் அருள் மற்றும் பெற்றோரின் ஆசீர்வாதத்தால் ஆண் குழந்தை பிறந்ததாகவும், தன்னுடைய மூத்த மகனுக்கு சின்னத்தம்பி வந்து விட்டதாகவும் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.
மேலும் குழந்தையின் பெயர் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என குறிப்பிட்டுள்ளார், இத்தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
With gods abundant grace and our parents blessings ???Vishagan,Ved and I are thrilled to welcome Ved’s little brother ??? VEER RAJINIKANTH VANANGAMUDI today 11/9/22 #Veer #Blessed ??thank you to our amazing doctors @sumana_manohar Dr.Srividya Seshadri @SeshadriSuresh3 ?? pic.twitter.com/a8tXbqmTxf
— soundarya rajnikanth (@soundaryaarajni) September 11, 2022