ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம்?
நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சௌந்தர்யா, தற்போது கர்ப்பம் தரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் இருக்கின்றனர், இதில் மூத்த மகளான தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இரண்டாவது மகளான சௌந்தர்யாவுக்கு, தேவ் என்ற மகன் உள்ள நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு தொழிலதிபரான விசாகனை மறுமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று திரும்பியதும், இந்த மகிழ்ச்சியான செய்தியை கூறி சந்தோஷப்படுத்தினாராம் சௌந்தர்யா.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.