தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்த அடுத்த சில மணிநேரத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்
பிரபல நட்சத்திர தம்பதி தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவாக அறிவித்துள்ளனர். கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இயக்குனர் கஸ்துாரி ராஜாவின் இளைய மகனான இவர், தன் 16 வயதில் நடிக்க வந்தார். 2004ல் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்துள்ளார்.
ஐஸ்வர்யாவும் விவாகரத்தை உறுதி செய்து அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி தங்கள் பிரிவை அறிவித்த சில மணி நேரத்தில் ஐஸ்வர்யாவின் இளைய சகோதரியான சவுந்தர்யாவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.
#NewProfilePic pic.twitter.com/0SnIQYvkkg
— soundarya rajnikanth (@soundaryaarajni) January 17, 2022
அதன்படி தானும், ஐஸ்வர்யாவும் தங்கள் தந்தை ரஜினிகாந்துடன் இருக்கும் இளம் வயது புகைப்படத்தை புதிய ப்ரோபைல் பிக்சராக மாற்றியுள்ளார், அதாவது தங்கள் தந்தை ரஜினிகாந்துக்கு உறுதுணையாக நாங்கள் இருவரும் எப்போதும் இருப்போம் என்பதை அவர் கூறவருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்அனர்
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரஜினிகாந்தை மனதை திடப்படுத்தி கொண்டு கலங்காமல் இருக்க சொல்லுங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.