சமீபத்தில் பெற்றோர்களான ரஜினியின் மகள் சவுந்தர்யா - விசாகன் தம்பதிக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்!
புதிதாக பிரம்மண்ட வீடு கட்டும் சவுந்தர்யா - விசாகன் தம்பதி.
சமீபத்தில் தம்பதிக்கு குழந்தை பிறந்த நிலையில் அதன் அதிர்ஷ்டம் தான் வீடு கட்டுவதன் தொடர்ச்சி என கூறும் ரசிகர்கள்.
சவுந்தர்யா - விசாகன் தம்பதி ஈசிஆர் சாலையில் ஒரு புதிய வீடு கட்டப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பூமி பூஜை நேற்று நடந்த நிலையில் சவுந்தர்யாவின் தந்தையான நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு அமைந்துள்ளது.
இதே பகுதியில் தற்போது தனுஷும் ஒரு வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் பணிகள் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் அந்த வீட்டில் குடியேறப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா மற்றும் விசாகன் ஆகியோர் தற்போது சென்னையில் உள்ள ஈசிஆர் சாலையில் ஒரு புதிய வீடு கட்டப் போகிறார்கள். இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. அந்த பூஜை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்தும் கலந்து கொண்டுள்ளார்.
விசாகன் - சவுந்தர்யா தம்பதிக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக வீடு கட்டும் மகிழ்ச்சியான விடயத்தையும் தம்பதி தொடங்கியுள்ளனர், இது குழந்தை பிறந்த அதிர்ஷ்டம் தான் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்,