சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்! விளக்கம் அளித்துள்ள கங்குலி
பிசிசிஐ தலைவரான கங்குலி தேர்வுக்குழுவில் இடம்பெற்றதாக புகைப்படம் வெளியான நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் கங்குலி.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான கங்குலி, பகல்- இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தினார்.
இவரது செயல்பாடுகள் திறம்பட இருந்தாலும், விராட் கோலி விவகாரத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வெளியான புகைப்படம் தேர்வு குழுவின் போது எடுக்கப்பட்ட படம் என பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கங்குலி, ஆதாரமற்ற குற்றச்சாட்டிற்கு மதிப்பளித்து யாருக்கும் பதில் அளிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. நான் பிசிசிஐ தலைவர். தலைவராக பிசிசிஐ-க்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்கிறேன்.
மேலும், நான் தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் இருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.
விராட் கோலி, ரோகித் சர்மா, ஜெய் ஷா ஆகியோருடன் நான் இருக்கும் படம் தேர்வுக்குழு கூட்டத்தின்போது எடுத்த படம் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
இந்தியாவுக்காக நான் 424 சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ளேன். இந்த நேரத்தில் மக்களிடம் இதுகுறித்து நினைவூட்டுவது மோசமான ஐடியா இல்லையா?’’ என பதிலளித்துள்ளார்.