கங்குலிக்கு கொரோனா பாதிப்பு! மருத்துவமனையில் அனுமதி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சவ்ரவ் கங்குலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா கொரோனாவின் மூன்றாவது அலை பாதிப்பில் உள்ளது. தற்போது ஒமைக்ரான் பரவல் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக டெல்லி மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாகி வருகிறது.
இதனால் ஒரு சில மாநிலங்களில்(கேரளா, உத்திரப்பிரதேசம்) இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவ்ரங் கங்குலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு செய்யப்பட்ட பிசிஆர் சோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் படியும், தனிமைப்படுத்திக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.