64 வயதில் மூன்றாவது திருமணம் செய்த தமிழ்ப்பட நடிகை? வைரலாகும் புகைப்படம்
பிரபல நடிகை ஜெயசுதா 64வது வயதில் மூன்றாவது திருமணம் செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஜெயசுதா
தமிழில் குல கௌரவம் படத்தின் மூலம் 1972யில் அறிமுகமானவர் நடிகை ஜெயசுதா. அதனைத் தொடர்ந்து அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும், பாண்டியன், அலைபாயுதே, தோழா, வாரிசு என 32 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், இந்தி மற்றும் மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 64 வயதாகும் ஜெயசுதா வட்டே ரமேஷ் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த ஜெயசுதா, 1985ஆம் ஆண்டு நிதின் கபூர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
இரண்டாவது கணவர் தற்கொலை
அவர் 2017ஆம் ஆண்டு மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழிலதிபர் ஒருவரை அவர் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், நபர் ஒருவருடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.