சினிமாவை விட்டு விலகும் நயன்தாரா? இவர்கள் தான் காரணமாம்..வெளியான தகவல்
பிரபல நடிகை நயன்தாரா சினிமாவை விட்டே விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை குழந்தைகள்
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா தாயானார். இதுகுறித்து சர்ச்சை ஒருபுறம் எழுந்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
சினிமாவுக்கு முழுக்கு போடும் நயன்தாரா
இந்த நிலையில் தனது குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்து நயன்தாரா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதுகுறித்து நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பில் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.