கட்டாயப்படுத்திய இளவரசர் ஹரி... அசைந்துகொடுக்காத மகாராணியார்: கடைசிவரை நிறைவேறாத ஆசை
ஒரு குறிப்பிட்ட விடயத்திற்காக இளவரசர் ஹரி தொடர்ந்து மகாராணியாரைக் கட்டாயப்படுத்தியும் அவர் அசைந்துகொடுக்கவில்லை என ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அது என்ன விடயம்?
ஜூன் மாதம், மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களுக்காக இளவரசர் ஹரியும் மேகனும், தங்கள் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுடன் அமெரிக்காவிலிருந்து பிரித்தானியா வந்திருந்தார்கள். தன் பெயரைக் கொண்ட தன் பேத்தியை மகாராணியார் முதன்முறையாக சந்தித்த தருணம் அது.
அப்போதுதான் அமெரிக்கா சென்றபிறகு முதன்முறையாக மேகனும் பிரித்தானியா திரும்பியிருந்தார். அந்த நேரத்தில், மகாராணியாரும் தங்கள் மகள் லிலிபெட்டும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என ஹரியும் மேகனும் விருப்பம் தெரிவித்தார்களாம்.
@Getty Images
நிறைவேறாத ஆசை
ஹரியும் மேகனும், மகாராணியாரும் தங்கள் மகள் லிலிபெட்டும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பியும் மகாராணியார் அதற்கு சம்மதிக்கவில்லையாம்.
ராஜ குடும்ப நிபுணரான Camilla Tominey என்பவர் தற்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஹரி மகாராணியாரும் தன் மகளும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தினாராம்.
@Misan Harriman/Duke and Duchess of Sussex HANDOUT/EPA-EFE/REX/Shutterstock
இரண்டு லிலிபெட்களும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என ஹரி வற்புறுத்தியும் மகாராணியார் மறுத்துவிட்டதாக Camilla Tominey தெரிவித்துள்ளார்.
அப்போது தனது கண்கள் சிவந்திருந்ததாகக் கூறி மகாராணியார் ஹரியின் மகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள சம்மதிக்கவில்லையாம்.
சோகம் என்னவென்றால், ஹரியின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. ஆம், அந்த சம்பவம் நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு மகாராணியார் இயற்கை எய்திவிட்டார்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.