நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவான நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்ட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், தான் தவறான கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்றும், அப்படி பேசியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் நடிகை கஸ்தூரி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்தது. மேலும், நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்க சென்றனர்.
கஸ்தூரி முன்னதாகவே வீட்டை பூட்டிவிட்டு, செல்போனையும் அணைத்து வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் அவரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் இருப்பதாக தமிழக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஐதராபாத் சென்ற தமிழக பொலிஸார் கஸ்தூரியை கைது செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |