ராஜ குடும்பத்தில் ஒரு விவாகரத்து? இளவரசி கசியவிட்ட தகவல்
மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்ட ஒரு இளவரசரும் இளவரசியும் பிரியக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ குடும்பத்தில் ஒரு விவாகரத்து?
ஆஸ்திரியா நாட்டு இளவரசரான அலெக்சாண்டரும் (Archduke Alexander) அவரது மனைவியான இளவரசி நட்டாஷாவும் (Natacha Roumiantzoff-Pachkevitch) பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் அவர்கள் விவாகரத்து செய்யலாம் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி, இளவரசர் அலெக்சாண்டருக்கும் இளவரசி நட்டாஷாவுக்கும் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
சொல்லப்போனால், சமீபத்திய ஆண்டுகளில், ஆஸ்திரிய வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அது கருதப்பட்டது.
ஆனால், திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், தம்பதியர் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இளவரசி நட்டாஷா சமீபத்தில் தன் நண்பர்களுக்காக ஆன்டி வாலண்டைன்ஸ் டே விழா ஒன்றை நடத்தியுள்ளார்.
திருமணம் ஆகாமல் தனியே வாழ்பவர்கள் அல்லது சமீபத்தில் தனது காதலரை அல்லது காதலியை பிரிந்தவர்கள் இப்படி ஒரு விழாவைக் கொண்டாடுவதுண்டாம்.
ஆக, விரைவில் அலெக்சாண்டரும் நட்டாஷாவும் பிரியக்கூடும் என்றும், அதன் அடையாளமாகவே இளவரசி இப்படி ஒரு விழாவைக் கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த விழாவின்போது தனது பெயரைக் கூறிய இளவரசி, தன் கணவர் பெயரை விட்டுவிட்டு, வெறுமனே தன்னை நட்டாஷா என அறிமுகம் செய்துகொண்டதும், தம்பதியர் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதற்கான அடையாளங்கள் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |