ஆபரேஷன் சிந்தூர்: ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுமா? இன்று ஆலோசனை
போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடரை தொடர்ந்து நடத்தலாமா என ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் பதற்றம்
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் டெல்லி இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
நடத்தலாமா? வேண்டாமா?
ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்போட்டி நிறுத்தப்பட்டதாகவும், சிரமத்திற்கு வருந்துவதாகவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், போர் பதற்றம் நிலவி வருவதால் எஞ்சிய போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கேற்றாற்போல், ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |