அடுத்த ஏலத்திற்கு முன்பே ஐவரை கழற்றிவிடும் CSK! தமிழர்கள் இருவர் வெளியேற்றம்

Ravichandran Ashwin Chennai Super Kings Sam Curran Vijay Shankar IPL 2025
By Sivaraj Apr 26, 2025 05:22 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மினி ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை வெளியேற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொதப்பும் CSK

ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக சொதப்பி வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, 7 தோல்விகளை சந்தித்துள்ளது.

இதனால் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ஃப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது. இந்த முறை ஏலத்தில் எடுக்கப்பட்ட சில வீரர்கள் அணியின் வெற்றிக்கு பங்களிக்கவில்லை. 

Chennai Super Kings, IPL 2025

இதன் காரணமாக ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பாக CSK அணி 5 வீரர்களை கழட்டிவிட உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

சேப்பாக்கத்தில் முதல் முறையாக சென்னையை வீழ்த்திய சன்ரைசர்ஸ்.. தொடரை விட்டு வெளியேறும் CSK

சேப்பாக்கத்தில் முதல் முறையாக சென்னையை வீழ்த்திய சன்ரைசர்ஸ்.. தொடரை விட்டு வெளியேறும் CSK

ரவிச்சந்திரன் அஸ்வின்:

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டும் பெரிதாக விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. மோசமான ஃபார்மில் இருக்கும் அவர் விடுக்கப்பட்டு, மினி ஏலத்தில் குறைந்த விலைக்கு மீண்டும் எடுக்கப்படலாம். 

Ravichandran Ashwin

விஜய் சங்கர்:

மிடில் ஆர்டரில் விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கர் ஒன்றிரண்டு போட்டிகளில் சோபித்தாலும், பெரிய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் ஐவரும் வெளியேற்றப்படலாம். 

Vijay Shankar

சாம் கர்ரன்:

சுட்டிக்குழந்தை என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட இங்கிலாந்தின் சாம் கர்ரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு CSK அணியில் இணைந்தார். ஆனால், ஆல்ரவுண்டரான கர்ரன் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சோபிக்காததால், இவரும் விடுவிக்கப்பட்டு மினி ஏலத்தில் எடுக்கப்படலாம். 

Sam Curran

டெவோன் கான்வே:

நியூசிலாந்தின் டெவோன் கான்வே கடந்த சீசன்களில் சிறப்பாக விளையாடினாலும், நடப்பு தொடரில் ஃபார்மில் இல்லை. ரச்சின் ரவீந்திரா இவருக்கு போட்டியாக இருப்பதால், இவரும் அணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

Devon Conway

ராகுல் த்ரிப்பாதி:

அஜின்கியா ரஹானேவுக்கு பதிலாக ஏலத்தில் எடுக்கப்பட்ட ராகுல் த்ரிப்பாதி, தொடக்க வீரராக களமிறங்கினாலும் ஓட்டங்கள் எடுக்க தடுமாறுகிறார். இதனால் நிச்சயமாக இவரை சென்னை அணி வெளியேற்றலாம்.  

Rahul Tripathi 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US