ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் அமெரிக்க குடிமகன்! வெளியான தகவல்
இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் அமெரிக்க இரட்டை குடியுரிமை பெற்ற முதியவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தம்பதி
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இரட்டைக் குடியுரிமை பெற்றவர் ஜூடி வெய்ன்ஸ்ட்டின் (70). இவர் தனது கணவர் காடி ஹக்காய் (73) உடன் இஸ்ரேலின் தெற்கு எல்லைக்கு அருகில் உள்ள Kibbutz-யில் வசித்து வந்தார்.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இந்த தம்பதி படுகாயமடைந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் ஹமாஸின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோ பைடன் அறிக்கை
இதன்மூலம் சிறைபிடிக்கப்பட்டு இறந்த முதல் அமெரிக்க குடிமகன் காடி ஹக்காய் என்றும், அவரது உடல் காசா பகுதியில் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இவர்களின் இறப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டார்.
அதில், ''அமெரிக்காவின் காடி ஹக்காய் அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸால் கொல்லப்பட்டதாக இப்போது நம்பப்படுகிறது என்ற செய்தியால் ஜில் மற்றும் நானும் மனம் உடைந்தோம்'' என தெரிவித்தார்.
AP Photo/Susan Walsh
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |