பாகிஸ்தானுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்படும்! ஐசிசி எச்சரிக்கை..வெளியான தகவல்
டி20 உலகக்கிண்ணத்தை புறக்கணிப்பதாக கூறும் பாகிஸ்தான் அணிக்கு கடுமையான் தடைகள் விதிக்கப்படும் என்று ஐசிசி எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்காளதேசத்திற்கு ஆதரவாக
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த அணி டி20 உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு ஸ்கொட்லாந்து சேர்க்கப்பட்டது.
AP Photo
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வங்காளதேசத்திற்கு ஆதரவாக பேசிவந்ததுடன் தங்களது அணியும் வெளியேறும் என்று கூறியததாக தகவல் வெளியானது.
கடுமையான தடைகள்
இந்த நிலையில் பாகிஸ்தான் கூறியதுபோல் விலகும் முடிவை கையில் எடுத்தால், அந்த அணிக்கு ஐசிசி கடுமையான தடைகளை விதிக்கும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அடி விழும். பாகிஸ்தானுக்கு பெரும் வருவாய் இழப்புகள் ஏற்படும். இதற்கு காரணமாக ஐசிசியின் நிதி குறைப்பு இருக்கும்.
பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட அனைத்து இருதரப்பு தொடர்களையும் ஐசிசி நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது.
ஐசிசியால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (PSL) வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதை தடை செய்ய முடியும்.
PSL தொடருக்கான சர்வதேச அங்கீகாரம் மற்றும் வணிக ஆதரவை ஐசிசியால் திரும்ப பெற முடியும்.
ICC
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |