சாம்பியன்ஸ் டிராஃபியில் விலகும் பேட் கம்மின்ஸ்? அடுத்த கேப்டன் இவர்தான் என தகவல்
அவுஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகலாம் என்ற சூழலில், அடுத்த தலைவராக ஸ்மித் அல்லது ஹெட் தெரிவு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராஃபி
வருகிற 19ஆம் திகதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கவுள்ள அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.
எனினும், மாற்றங்கள் இருப்பின் 11ஆம் திகதிக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என ஐசிசி கூறியது.
இதன் காரணமாக பல கிரிக்கெட் வாரியங்களும், தங்களது அணியில் காயமடைந்துள்ள வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தெரிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அடுத்த கேப்டன்
இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) காயம் காரணமாக விலக உள்ளதாக செய்தி வெளியானது.
அவருக்கு காணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அணித்தலைவரான அவர் விலகுவார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, ஆல் ரவுண்டர் வீரர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகியதால், அடுத்த அணித்தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், கம்மின்ஸ் பங்கேற்காவிட்டால் நட்சத்திர வீரரான ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) அல்லது ட்ராவிஸ் ஹெட் (Travis Head) ஆகிய இருவரில் ஒருவர் அணியை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |