ராஷ்மிகா மந்தனா, விஜய்தேவரகொண்டா ஜோடிக்கு முடிந்த நிச்சயதார்த்தம்? பிப்ரவரியில் திருமணம்
பிரபல நடிகர் விஜய்தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
நட்சத்திர ஜோடி
தெலுங்கில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரும் இந்திய அளவில் பிரபலமான நடிகையான ரஷ்மிகா மந்தனாவும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் நேற்றைய தினம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்ட ஒரு நெருக்கமான விழாவில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
என்றாலும் இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் குறித்து அறிவிக்கவில்லை.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |