என்னை நீக்க வேண்டுமென்றால்.. கோடிகளில் பணம் கைமாறியதா?
தன்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றால், கொடுத்த பணத்தை திருப்பி தர வேண்டும் என லீமா ரோஸ் கட்சிக் கூட்டத்தில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
லீமா ரோஸ்
அதிமுகவின் மகளிர் அணியின் மாநில துணை செயலாளராக இருப்பவர் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ். இவர் கட்சிக்காக பெரிய அளவில் பணம் செலவழித்ததாக கூறப்படுகிறது.
தற்போது இவர் எடப்பாடி பழனிச்சாமியின் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிகிறது.
இதனால் கட்சியில் ஒரு பிரிவினர் தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்திருப்பதால், அவர்களை பதவியில் இருந்து நீக்கும் முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்ததால், லீமா ரோஸையும் அவ்வாறு நீக்குவாரா என்ற கேள்வி கட்சி கூட்டத்தில் எழுந்ததாக கூறப்படுகிறது.
அதாவது, எஸ்.பி.வேலுமணி மற்றும் சண்முகம் தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் லீமா ரோஸ் கலந்துகொண்டிருக்கிறார்.
பதவி பறிப்பில் இருந்து தப்பித்துக் கொண்டார்
அப்போது எல்லோரது கட்சி பதவிகளையும் பறித்து வருவதைப் பற்றி விவாதிக்கப்பட்டபோது, லீமா ரோஸ் மட்டும் பதவி பறிப்பில் இருந்து தப்பித்துக் கொண்டார் என்று எஸ்.பி.வேலுமணி கூறியிருக்கிறார்.
அதற்கு லீமா ரோஸ், "கட்சியில் என்னை சேர்ப்பதற்காக என்னிடம் நடத்திய பேரத்தையும், கட்சி நிதி என்ற வகையில் என்னிடம் இருந்து பெறப்பட்ட தொகையையும், கட்சி பதவி கொடுப்பதற்காக வாங்கிய தொகையையும் எடப்பாடிக்கு எதிராக அம்பலப்படுத்திவிட்டால் அவ்வளவுதான்.
கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, எனது கட்சி பதவி மட்டுமல்ல, கட்சியில் இருந்தே கூட அவர் நீக்கிக் கொள்ளட்டும் என்று பேட்டி கொடுத்தால், அவர் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்?" என்று கூறியதாக எதிர்ப்பாளர் அணியினர் தெரிவித்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |