தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தும் ட்ரம்ப்? பதவி ஏற்கும் முன்பே நடவடிக்கையா என பதற்றம்
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவையில் மாற்றம்
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுவேன் என்று அவர் முன்பு கூறியிருந்ததை, சட்டம் மூலம் அமுலுக்கு கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை, அதிகாரம் தொடர்பில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ட்ரம்ப் பலருக்கு பொறுப்புகளை நியமித்து வருகிறார்.
இந்த சூழலில், தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்த டொனால்ட் ட்ரம்ப் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவசரநிலை பிரகடனம்
இதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அமெரிக்க ராணுவத்தைக் கொண்டு அங்கு வசிக்கும் சட்டவிரோத குடியேற்ற மக்களை நாடு கடத்தவும் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாகவும் மறுபுறம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அவர் அமெரிக்காவில் அவசரநிலையை பிரகடனத்தை அமுல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
தற்போது அமெரிக்காவில் 1.1 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாகவும், ட்ரம்ப் நடவடிக்கை எடுத்தால் சுமார் 2 கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. "அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே" என்று தேர்தலின்போது டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |